fbpx

காட்டுக்குள் பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடி..!! காதலனை தாக்கிவிட்டு 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!!

கோயிலுக்கு சென்ற சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதிக்குள் வைத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள சில்வானி-சாகர் சாலையில் உள்ள சியர்மாவ் வனப்பகுதியில் கடந்த 23ஆம் தேதி மாலை இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 15 வயது சிறுமியும், அவரது 21 வயது காதலனும் அப்பகுதியில் உள்ள வனதேவி கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

பின்னர், கோயிலில் இருந்து திரும்பிய அவர்கள், இருசக்கர வாகனத்தை வனப்பகுதியில் நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதனை அவ்வழியாக சென்ற லாரி ஓட்டுநர் நோட்டமிட்டுள்ளார். பின்னர், தனது கூட்டாளிகள் இருவருடன் அந்த பகுதிக்கு வந்துள்ளார். இதையடுத்து, காட்டுக்குள் இருவரையும் சுற்றி வளைத்த அவர்கள், சிறுமியின் காதலனை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

பின்னர், சிறுமியை காட்டுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து, சிறுமியும், அவரது காதலனும் காட்டுப் பகுதியில் இருந்து சாலையை வந்தடைந்தனர். ஆனால், அந்த கும்பல் இளைஞரின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால், அங்கிருந்து நடந்து வந்தே போலீசாரிடம் நடந்தவற்றை கூறி புகாரளித்தனர். அதன் பேரில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : கனமழையால் தத்தளிக்கும் மக்கள்..!! ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க..!!

English Summary

The incident of a girl who went to a temple being kidnapped and raped in a forest has caused shock.

Chella

Next Post

முடிவுக்கு வந்தது போர்!. இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்!. ஜோ பைடன் ட்வீட்!.

Wed Nov 27 , 2024
The war has ended! Approval of cease-fire between Israel and Hezbollah! Joe Biden Tweet!.

You May Like