fbpx

Alert: வங்ககடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி….!

தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22 மற்றும் 23-ம் தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், தேனி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நாளை தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 24-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், 25-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Wed May 22 , 2024
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை நடத்தப்பட உள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டம் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் உள்ள 388 ஒன்றியங்களில் அடங்கியுள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 18.12.2023 அன்று கோவை மாநகரில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கிவைத்தார்கள். […]

You May Like