fbpx

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!… ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப உத்தரவு!

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்பதால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் நாளைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (நவம்பர் 27) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28-ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் டிசம்பர் 1ம் தேதிவரை வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறையில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (27.11.2023) முதல் 01.12.2023 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்றூம் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

அடுத்த கட்டம்...! மேலிருந்து துளையிடும் பணி தொடங்கியது... 4 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தகவல்...!

Mon Nov 27 , 2023
உத்தராகண்டில் இடிபாடுகளுக்கு நடுவே மற்றும் மலைக்கு மேலிருந்து என இரண்டு பக்கம் துளை இட்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரகாசி, யமுனோத்ரியை இணைக்கும் வகையில் சில்க்யாரா வளைவு – பர்காட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் 60 மீட்டர் தொலைவு சுரங்கப் பாதையில் மண் சரிந்தது. இருபுறமும் […]

You May Like