fbpx

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!! இடி மின்னலுடன் மழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடலில், மியான்மர் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகளுக்கு டெங்கு..!! ஒருவர் சிகிச்சை பலனின்றி பலி..!! திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

Thu Sep 28 , 2023
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே நோய்களின் பரவல் அதிகரிக்கும். அந்த வகையில், தமிழ்நாட்டிலும் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக, டெங்கு பாதிப்பு பல மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி அபிநிதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் சுமித்ரா தம்பதிக்கு 5 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கடந்த […]

You May Like