fbpx

செப்.30ஆம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! இடி மின்னலுடன் கனமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

வங்கக் கடலில் செப்.30ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு அந்தமான், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக சென்னை, தருமபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கோவை, கிருஷ்ணகிரியில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் 8 ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வங்கக் கடலில் செப்.30ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது அதிமுக..!! எடப்பாடி தலைமையிலான கூட்டத்தை தொடர்ந்து அதிரடி அறிவிப்பு..!!

Mon Sep 25 , 2023
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அதிமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக […]

You May Like