fbpx

வரும் 17இல் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 17ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’சொந்த ஊருக்கு போற ஆர்வத்துல இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க’..!! சிக்கினால் ஆக்‌ஷன் தான்..!!

Fri Nov 10 , 2023
தீபாவளி என்றாலே பட்டாசுதான். படபடவென வெடிச்சத்தம் கேட்டால்தான் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டும். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பணியாற்றி வரும் ஊர்களில் இருந்து பட்டாசுகளை வாங்கி தங்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டி […]

You May Like