fbpx

அலறியடித்த மக்கள்…! ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவில் 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்…!

ஜம்மு காஷ்மீரில் இன்று நள்ளிரவு 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் இன்று நள்ளிரவு 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது. நள்ளிரவு 12.38 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மியான்மர், இந்தோனேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் என பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஜப்பான் நாட்டில் சுமார் 62 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பான் நிலநடுக்கம்

ஜனவரி 1-ம் தேதி ஜப்பானில் முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. ஆனால் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பதிவானது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்பொழுது சுனாமிக்கான எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

இன்று காங்கிரஸ் கட்சியில் இணையும் ஆந்திரா முதல்வர் தங்கை Y.S.ஷர்மிளா...!

Thu Jan 4 , 2024
ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் உள்ளார் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் சமீப காலமாக இருந்து வந்தது . அதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த செப்டம்பர் மாதம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி […]

You May Like