சேலம் அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் செங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி விவசாயியான முருகேசன் மற்றும் ஜெயலட்சுமி தம்பதியினருக்கு விஜய் என்ற மகனும் உள்ளனர். முருகேசனின் இரண்டாவது மகளான ரோஜா ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஆத்தூர் அருகே உள்ள தண்டவராயபுரம் பகுதியைச் சார்ந்த நீலகிருஷ்ணன் என்பவரது மகன் சாமிதுரை இவருடன் மழையில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு செல்லும் போது ரோஜாவை பார்த்து அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்
இதனைத் தொடர்ந்து மாணவியின் ஊருக்கு அடிக்கடி சென்று அவரைப் பார்த்து வருவது பேருந்தில் பின் தொடர்வது என ஒரு தலையாக ரோஜாவையே சுத்தி வந்திருக்கிறார் சாமிதுரை. மேலும் தன்னை காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டவும் செய்து இருக்கிறார். இந்த விஷயம் ஊர்க்காரர்களுக்கு தெரிய வரவே அவர்கள் இரண்டு ஊர்களிலும் உள்ள பெரிய ஆட்களை கூட்டி எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவை கொலை செய்ய முடிவு எடுத்து அவரது வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து அங்கு வந்த சாமிதுரை தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி ரோஜாவை மீண்டும் மிரட்டி இருக்கிறார். பின்னர் கோபத்தில் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து ரோஜாவின் மீது ஊற்றி அவரை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பின்னர் அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து ரோஜாவின் தலையின் மீது போட்டு கொலை செய்துள்ளார். மேலும் அவரை தடுக்க வந்த குடும்பத்தினரையும் அடித்து காயப்படுத்தி இருக்கிறார். பின்னர் அங்கிருந்து தப்பியோடி விட்டார் சாமிதுரை. இச்சம்பவத்தில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரோஜாவை மீட்டு ஆரம்ப சுகாதார மையம் அழைத்துச் சென்றனர் அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சாமி துறையை தேடி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.