fbpx

மூக்கு வழியாக சென்று மூளையை குதறி விடும் ஆமீபா……! திகில் பயத்தில் உரைந்த மக்கள்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் மூளையை தின்னும் அமீபாவால் ஒருவர் இறந்துள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஃப்ளோரிடா வின் சார்லட் கவுண்டி என்ற பகுதியைச் சார்ந்த ஒரு நபர் குழாய் தண்ணீரை எடுத்து தனது மூக்கில் ஊற்றி சுத்தம் செய்திருக்கிறார். அப்போது அந்த தண்ணீரில் இருந்து அமீபா அவரது மூக்கின் வழியாகச் சென்று மூளையில் உள்ள திசுக்களை தாக்கி அழித்து இறப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ஃப்ளோரிடா நிர்வாகம் அப்பகுதியில் உள்ள மக்களை குழாய் தண்ணீரின் மூலம் யாரும் மூக்கு கழுவ வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக தொற்று நோய் நிபுணர்களின் கருத்துப்படி இந்த அமீபா இருக்கக்கூடிய தண்ணீரை குடித்தால் மனிதனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது ஆனால் அந்தத் தண்ணீரை மூக்கின் வழியாக செலுத்தி கழுவும் போது அதில் இருக்கக்கூடிய அமீபா நேரடியாக சென்று மனிதனின் மூளையை தாக்கி அழிக்கிறது. இதனால் இறப்பு ஏற்படுவதாக தொற்றுநோய் ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அமீபா தொற்றுக்கு ஆளானவர்களில் 97 சதவீதம் பேர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுவரை 154 பேருக்கு இந்த தொற்று இருந்திருக்கிறது அவற்றில் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்து இருக்கின்றனர். மேலும் ப்ளோரிடா நகர நிர்வாகம் தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்துமாறு அம்மக்களை அறிவுறுத்தி இருக்கிறது.

Baskar

Next Post

"பெண்கள் உள்ளாடைக்கு இனிமேல் ஆண்கள் தான் மாடல்" வினோதமான சட்டம் கொண்டுவந்த அரசாங்கம்!

Sat Mar 4 , 2023
பெண்களின் உள்ளாடை விளம்பரங்களிலும் மாடலிங் ஷோக்களிலும் ஆண்கள் நடிக்க தொடங்கி இருப்பது உலகம் முழுவதும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் ஆபாச கலாச்சாரம் தலை தூக்கி இருக்கக்கூடிய வேளையில் சீன அரசாங்கம் பெண்கள் உள்ளாடை விளம்பரங்களில் நடிக்க தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்கள் பெண்களின் உள்ளாடை விளம்பரங்களுக்கு ஆண்களை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற பேஷன் ஷோவில் பெண்களின் உள்ளாடைகளை […]

You May Like