fbpx

“ப்ரேக் அப் லெட்டர் ல கையெழுத்து போட்டு அனுப்பு”! வைரலாகிய காதல் முறிவு டாக்குமெண்ட்!

குஜராத் மாநிலத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் உறவுமுறை குறித்த கடிதம் எழுதியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. தற்காலங்களில் உறவை முறித்துக் கொள்பவர்கள் ஒரு தொலைபேசி அழைப்பின் வாயிலாகவோ அல்லது குறுஞ்செய்திகள் மூலமாகவோ தகவலை தெரிவித்து முடித்துக் கொள்கிறார்கள். சிலர் எதுவுமே சொல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் குஜராத்தைச் சார்ந்த இந்த இளைஞர் செய்துள்ள சம்பவம் சமூக வலைதளவாசிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தன் காதலியுடனான உறவை முறித்துக் கொள்வதற்காக அந்த இளைஞர் தனது காதலிக்கு உறவுமுறை கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி இருக்கும் சம்பவம் தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது.

தான் எழுதி இருக்கும் கடிதத்தில் அந்த நபர் “நீ நலமாக இருக்கும் சமயத்திலே இந்த கடிதம் உன்னை அடையும் என்று நம்புகிறேன். என்னை சங்கடப்படுத்தும் ஒரு நிகழ்வைப் பற்றி விவரிக்க நான் விரும்புகிறேன். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு நாம் இருவருக்குமான உறவை பற்றி மறுபரிசீலனை செய்ய என்னை தூண்டியது. நம் உறவை தொடர முடியாது என்பதை மிகுந்த வருத்தத்துடன் உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நீ மிகவும் அழகானவள் ஆனால் சமீபத்தில் எனக்கு கிடைத்த ஒரு தகவல் நமது உறவின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிட்டது. என்னால் நேர்மைக்கு மதிப்பளிக்கும் உணர்வுகளை புறக்கணிக்க முடியாது. இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல என்று உனக்கு தெரியும் என நம்புகிறேன். நீ நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். மேலும் என்னுடைய முடிவுக்கு பதிலளிப்பாய் எனவும் நம்புகிறேன்” என்று அந்த இளைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு தருமாறு காதலியிடம் கேட்டிருக்கிறார் அந்த நபர். தற்போது இந்த கடிதம் தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Rupa

Next Post

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் கோர விபத்து! ஒருவர் உடல் நசுங்கி பலி! 6 பேர் படுகாயம்!

Thu Mar 2 , 2023
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் ஆறுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சென்னை வியாசர்பாடியில் இருந்து அருப்புக்கோட்டையில் நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்விற்காக பயணிகள் வேனில் டிரைவர் உட்பட 18 பேர் சென்று கொண்டிருந்தனர். வேனை வியாசர்பாடி சார்ந்த 32 வயதான கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது டிரைவர் கார்த்திக்கிற்கு […]

You May Like