fbpx

தொடர்ந்து குற்றச்செயல்கள் அதிகரிப்பு …. வெறும் ரூ.200 க்கு நடந்த பயங்கர கொலை …

டெல்லியில் ரூ.200 கேட்டு தரவில்லை என்பதற்காக அந்த நபரை இரண்டு சிறுவர்கள் சேர்ந்துதாக்குதல் நடத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் படேல் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருண்பஞ்சால் என்பவர் பூங்கா அருகே நின்று கொண்டிருந்திருக்கின்றார். அங்கு வந்த 3 சிறுவர்கள் அவர்களிடம் ரூ.200 கேட்டுள்ளனர். அதுவும் சூதாடுவதற்காக 200 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் சிறுவர்கள் ஆத்திரமடைந்தனர்.

அவரிடம் இருந்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தி, இரும்புக் கம்பி , செங்கல் போன்றவற்றால் தாக்கிவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சி.சி.டி.வி. வீடியோக்களை ஆராய்ந்தபோது இரும்புக்கம்பி , செங்கல் வைத்து தாக்குதல் நடத்தியது வீடியோவில் இருந்தது. மேலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் தாக்கியுள்ளார் இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் அந்த 3வது நபரின் பெயர் ரவிகாந்த் என்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னணியில் பெரிய குழு ஏதாவது செயல்படுகின்றதா என விசாரித்து வருகின்றனர். வெறும் 200 ரூபாய்க்காக நடந்த இந்த கொலைச் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து இது போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Post

TVS, Ola நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்க உள்ள Hero Vida எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... விரைவில் அறிமுகம்...

Thu Sep 22 , 2022
ஹீரோ விடா (Hero Vida) எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹீரோ விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அக்டோபர் 7-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதி ஜூலை 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஸ்கூட்டர் அடுத்த மாதம் 7-ம் தேதி அறிமுகமாக உள்ளது.. இது ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் […]

You May Like