fbpx

சைபர் கிரைம் குற்றங்களை மட்டும் கற்றுக்கொண்ட நபர்!… தினமும் ரூ.5 கோடி வரை கொள்ளை!… போலீஸிடம் சிக்கியது எப்படி!

சைபர் கிரைம் குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்ரீனிவாஸ் ராவ் தாடி எனும் 49 வயது நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து மும்பை போலீஸார் வெளியிட்ட தகவலில், ஸ்ரீனிவாஸ் ராவ் தாடி படித்தது 12ஆம் வகுப்பு மட்டுமே. ஆனால், சைபர் குற்றங்களுக்கு என்னென்ன தேவையோ அதனை மட்டும்கற்று தேர்ந்துள்ளார். அதன் பிறகு ஒரு குழு அமைத்து, பெரும்பாலும் பெண்களை போலீஸ் அதிகாரி போல பேச வைத்து, ஒரு நபரை குறிவைத்து, அவருக்கு பார்சல் வந்துள்ளது என கூறி, அதில் துப்பாக்கி, ஆயுதங்கள் வந்துள்ளதாக பொய்யாக கூறி, பின்னர் அதில் இருந்து தப்பிக்க வழிகள் கூறி அதன் மூலம் தாடியின் கும்பல் பணம் பறித்து வந்துள்ளதாக தெரிவித்தனர்.

இந்த சைபர் கிரைம் குற்றவாளி வங்கி கணக்கில் இருந்து தினமும் 5 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பல நாட்களாக தேடப்பட்டு வந்த சைபர் கிரைம் குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்ரீனிவாஸ் ராவ் தாடியை ஹைதராபாத்தில் உள்ள ஒரு விலையுயர்ந்த தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த போது பங்கூர் நகர் காவல் நிலையக் குழு மூலம் கைது செய்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Kokila

Next Post

ட்விட்டரில் இனி இதற்கும் கட்டணம்!... பயனர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் எலான் மஸ்க்!...

Fri May 5 , 2023
ட்விட்டரில் அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள், தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் […]

You May Like