fbpx

”கழகத்திற்காக ஓடோடி உழைத்த கழகப் போராளி”..!! தவெக நிர்வாகி மறைவுக்கு விஜய் இரங்கல்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகியான சரவணன், திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி அக்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது மறைவுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி, என் மீதும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவர், கட்சிக்காக அயராது ஓடோடி உழைத்த கழகப் போராளி திரு.சரவணன் அவர்கள் திடீர் உடல்நலக் குறைவால் காலமானது அதிர்ச்சியையும், மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சரவணன், சித்தன்குடியைச் சேர்ந்தவர், அவருக்கு ஒரு மனைவியும், மகனும் உள்ளனர். கல்லூரி நாட்களில் இருந்து நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். சரவணன், நடிகர் விஜய் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் மட்டுமன்றி, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நெருக்கமானவராகவும் இருந்தார்.

வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் ஏற்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த சரவணனின் திடீர் மறைவு அவரது கட்சி தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : மழைக்காலத்தில் உங்கள் வீட்டில் பாதுகாப்பா இருக்கணுமா..? தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை..!!

English Summary

The death of Mr. Saravanan, a member of the association who worked tirelessly for the party, due to his sudden ill health is shocking and deeply painful.

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களே..!! அக்.31ஆம் தேதியே கடைசி..!! உடனே இந்த வேலையை முடிச்சிருங்க..!!

Tue Oct 22 , 2024
There is only 10 days to complete the IKEYC verification. It can be changed easily by visiting the online center.

You May Like