fbpx

இருவிரல் பரிசோதனை செய்யப்பட்ட விவகாரம்…..! சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் விசாரணை…..!

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணங்களை செய்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்த விசாரணையில் அந்த சிறுமிகளிடம் கன்னித்தன்மை பரிசோதனைக்காக தடை செய்யப்பட்ட இருவிறல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையில், கடந்த 9ம் தேதி கடலூர் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் லட்சுமி வீரராகவன் மற்றும் உறுப்பினர்கள் இளங்கோவன், வினிதா முகுந்தன், செந்தில் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர் தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டு இது குறித்த விசாரணை அறிக்கையை தங்களுடைய தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக நேற்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் சிதம்பரத்திற்கு சென்றார்.

நடராஜர் கோவிலுக்கு சென்று ஆதிமூல நாதர் சன்னதி அருகே அறுபத்தி மூனவர் சன்னதியில் பாதிக்கப்பட்ட தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) ராஜசேகரன் மற்றும் இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் பரிசோதனை செய்த மருத்துவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பிறகு பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிறுமிகளின் வீடுகளுக்கு சென்று அந்த சிறுமிகளிடமும் அவர்களுடைய பெற்றோரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தி பதிவு செய்தனர். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கறிஞர் ஜி சந்திரசேகரன் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் இந்த சம்பவத்தில் தானாக முன்வந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது. இதுகுறித்து தமிழக காவல்துறை தலைவரிடம் விளக்கம் பெறப்பட்டது. தமிழக தலைமைச் செயலாளரிடமிருந்தும் அறிக்கை பெறப்பட்டது. அந்த அறிக்கை சரியா என்பதை விசாரித்தோம் என்று கூறியுள்ளார்.

முதலில் பாதிக்கப்பட்ட தீட்சிதர்கள், 2வதாக காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், 3வதாக பாதிக்கப்பட்ட சிறுமிகள் என்று 3 கட்டமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருவிரல் பரிசோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

விசாரணை அறிக்கையை ஆணையத் தலைவரிடம் மிக விரைவில் அளிக்க இருக்கின்றோம். இந்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Next Post

கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தந்தை..!! டிராக்டர் ஏற்றி கொலை செய்த மகன்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Thu May 25 , 2023
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தந்தையை டிராக்டர் ஏற்றி மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள பெடாக் கிராமத்தைச் சேர்ந்தவர் தாஜி என்ற தாது கணபதி அகாலே (70). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகனுக்கு ரூபாய் 70 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதையடுத்து தந்தை, மகனிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]

You May Like