கடந்த மார்ச் மாதம் நாசா ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது, வரும் 2046 பிப்ரவரி 14ஆம் தேதி, 2023 டி.டபிள்யு என்ற விண்கல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக கூறியிருந்தது. இது மணிக்கு 24.64 கி.மீ. வேகத்தில் சுற்றுவதாகவும், தன்னுடைய சுற்றுப்பாதையை ஒரு முறை சுற்றி முடிக்க மொத்தம் 271 நாட்கள் ஆகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விண்கல், இந்திய பெருங்கடல் – பசிபிக் கடல், அமெரிக்காவின் மேற்கு – கிழக்கு கடற்கரை பகுதிகள் – லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன் உள்ளிட்ட நகரம் ஏதாவது ஒன்றில் விழுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.
இது புதிய விண்கல் என்பதால் அதன் சுற்றுப்பாதையை கணிக்க நீண்ட நாட்கள் தேவைப்படுவதாகவும், எதிர்காலத்தில் இது பூமியை தாக்கும் வாய்ப்பு இல்லாமலும் போகலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், மற்றொரு தகவலை நாசா வெளியிட்டுள்ளது. அதாவது, பூமியின் மீது புதிய விண்கல் ஒன்று மோதப்போகிறதாம். அது பயங்கரமான சேதங்களையும் விளைவிக்க போகிறதாம். இதற்காக சுமார் 7 ஆண்டுகளாகவே, தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், பூமி மீது மோதி சுமார் 22 அணுகுண்டுகளின் நாசத்தை விளைவிக்கப்போகும் விண்கல் ஒன்றை விண்வெளியில் எதிர்கொள்ள போவதாகவும் நாசா முடிவு செய்துள்ளது.
பூமியின் மீது விளைவிக்கப்போகும் நாசத்தை அளவிடுவதற்காகவும், அதனை விண்வெளியை அழிப்பதற்கான ஏற்பாடுகளுக்காகவும், அந்த விண்கல்லின் பரப்பிலிருந்து மாதிரியை சேகரிக்க அனுப்பப்பட்ட விண்கலம் விரைவில் பூமிக்கு திரும்ப இருக்கிறதாம். வரும் 2182ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று பூமி மீது மோதவிருக்கும் “பென்னு” என்று பெயரிடப்பட்ட இந்த விண்கல்லுக்கு எதிரான நடவடிக்கைகளை இப்போது முதலே நாசா தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விண்கல்லை விண்வெளியில் வைத்தே அழிக்கவும், நாசா திட்டமிட்டுள்ளது. இப்படித்தான், கடந்த 1998-ல் புரூஸ் வில்லிஸ் நடித்த “ஆர்மகெடான்” என்ற படம் ஹாலிவுட்டில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதாவது, பூமி மீது விழுந்து பேரழிவை ஏற்படுத்தப்போகும் விண்கல் ஒன்றினை, விண்வெளியில் வைத்தே விஞ்ஞானிகள் குழுவினர் அழிக்க முற்படுவார்கள். இதுதான் அந்த படத்தின் கதை. அந்த கற்பனை கதைதான், இப்போது நிஜமாக போகிறதோ? என்ற கருத்துக்கள் இணையத்தில் ஆக்கிரமித்து வருகின்றன.