fbpx

#திண்டுக்கல் : ஆண், பெண் இரு குணாதிசியங்களுடன் பிறந்த அதிசய கன்றுக் குட்டி..!

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் கேரளா பெருமாள் என்பவர் தனது வீட்டில் மாடு ஒன்று வளர்த்து வந்துள்ளார். வீட்டில் தான் இந்த அதிசயக் கன்று பிறந்தது. தன் தோட்டத்தில் 3 பசு மாடுகளை கேரளா பெருமாள் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் வளர்த்த பசு மாடு கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இதனை தொடர்ந்து பிறந்த கன்றானது இடுப்பு பகுதிக்கு மேலே சாதாரண பசு தோற்றமும், இடுப்புக்கு கீழ் நான்கு கால்களுடன் காளை கன்றுக்கான உடல் அம்சமும், மறுபுறம் பசுங்கன்றுக்கான உடல் அமைப்பும் இணைந்து அதிசயத்தக்க வகையில் இருந்தது.

அதிசய கன்றுக் குட்டியை கண்டு வியப்படைந்த கேரளா பெருமாள் குடும்பத்தை சேர்ந்தவர் , ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியானது காட்டுத் தீ போல் தகவல் பரவிய நிலவியுள்ளது. மேலும் அக்கம் பக்கத்து கிராமத்து மக்கள் இவ்வாறு பிறந்த அதிசய கன்றுக் குட்டியை காண வந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் கன்றுக் கட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

Rupa

Next Post

#புதுக்கோட்டை :4 குழந்தைகளின் தாய் மாயம்.. சடலமாக கிடந்த அதிர்ச்சி..!

Mon Nov 28 , 2022
புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள பல்லவராயன்பத்தில் திருச்செல்வம் மற்றும் மனைவி பழனியம்மாள் (35) வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருச்செல்வம் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில் மனைவி தனது தந்தை வீட்டில் அவர்களின் 4 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.  இந்த நிலையில் சென்ற புதன்கிழமை வெளியே சென்ற பழனியம்மாள் வெகு நேரம் கழித்தும் வீடுதிரும்பவில்லை. இது பற்றி தந்தை தங்கவேல் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து […]

You May Like