fbpx

விஞ்ஞான உலகில் அதிசயம்!. கருவின் மூளையை 3D ஸ்கேன் செய்த ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்!.

IIT Madras: கருவின் மூளையின் 3D உயர் தெளிவுத்திறன் படத்தைப் படம்பிடித்த உலகின் முதல் நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ் அறிவியல் உலகில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையின் மூலம், மூளை வரைபட அறிவியலில் இந்தியாவின் அந்தஸ்து மேலும் உயரும். கருவின் மூளையின் இந்த 3டி படங்களின் தரவுகளுக்கு தரணி என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு திறந்த மூலமாகும். அதாவது அனைத்து ஆராய்ச்சியாளர்களும் இந்தத் தரவைப் படிக்க முடியும்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சென்னையை சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து கருவில் உள்ள குழந்தையின் மூளையின் முப்பரிமாண டிஜிட்டல் படத்தை காட்சிப்படுத்தியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தில் தலைவர் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம் தலைமையிலான இந்த ஆராய்ச்சி இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

உலகத்திலேயே முதல் முறையாக 5,132 மூளையின் தனித்தனி பகுதிகளை மொத்தமாக பகுப்பாய்வு செய்து முப்பரிமாண டிஜிட்டல் படமாக வடிவமைக்கப்பட்டிருப்பது நாட்டுக்கு பெருமை மிகுந்த தருணம் எனத் தெரிவிக்கிறார் பேராசிரியர் குமுதா. கருவில் இருந்து ஒவ்வொரு பருவத்திலும் கற்றல் குறைபாடு, மன இறுக்கம் போன்ற குறைபாடுகளை புரிந்து கொள்வது அவசியமாகிறது. இத்தகைய மேம்பட்ட மனித நரம்பியல் தரவுகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். நூறாண்டுகள் பழமை வாய்ந்த நரம்பியல் அறிவியல் இதழான ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி (Journal of Comparative Neurology) இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை சிறப்பு இதழாக வெளியிட்டது தனித்துவமிக்கதாக பார்க்கப்படுகிறது.

Readmore: ஸ்மார்ட்போனில் வைரஸ் உள்ள ஆப்ஸை எப்படி கண்டுபிடிப்பது?. தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

Kokila

Next Post

400 பில்லியன் டாலரை கடந்த சொத்து மதிப்பு.. புதிய உச்சம் தொட்ட எலான் மஸ்க்..!!

Thu Dec 12 , 2024
Elon Musk becomes the first person to reach a net worth of $400 billion

You May Like