fbpx

இன்று விண்ணில் நடக்கும் அதிசயம்..!! வெறும் கண்களால் பார்க்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

நிலா பூமிக்கு மிக அருகில் வரும் போது, ‘ப்ளூ மூன்’ அல்லது சூப்பர் மூன் நிகழ்வு என குறிப்பிடப்படுகிறது. இவை இரண்டு சேர்த்து நிகழ்வதை ‘சூப்பர் ப்ளூ மூன்’ என்று அழைக்கிறார்கள். இந்த சமயத்தில் நிலா மிக பெரியதாகவும், பிரகாசமாகவும் காட்சி அளிக்கும். “சூப்பர் மூன்” என்ற சொல் முதன்முதலில் 1979இல் ஜோதிடர் ரிச்சர்ட் நோலே என்பவரால் சொல்லப்பட்டது.

இந்த முழு சூப்பர் மூன் இந்தாண்டின் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான முழு நிலவுகளாகும். அவை வழக்கத்தை விட தோராயமாக 30% பிரகாசமாகவும், 14% பெரியதாகவும் தோன்றும். நீல நிலவு என்பது ஒரு காலண்டர் மாதத்தில் 2-வது முழு நிலவை குறிக்கிறது. அதாவது, ஒரு மாதத்தில் பூமிக்கு மிக அருகில் 2 முறை நிலவு வருவதால், அதை சூப்பர் மூன் என்று அழைக்கிறோம். இரண்டாவது முறை அதை ப்ளூ மூன் என்கிறோம். அதற்காக இரண்டாவது நிலவு நீல நிலவாக தெரியாது.

வட அமெரிக்காவில் ஆகஸ்ட் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை சுமார் 3 நாட்களுக்கு முழுமையாகத் தோன்றும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலையில் சூப்பர் ப்ளூ மூன் தெரியும். இந்தியாவை பொறுத்தவரை ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிகாலை வரை பார்க்க முடியும். ஐரோப்பிய நாடுகளில் ஆகஸ்ட் 18 மாலை முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு வரையும், மீண்டும் ஆகஸ்ட் 20 அதிகாலையிலும் சூப்பர் ப்ளூ மூன் நிலவைக் பார்க்கலாம்.

Read More : 1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தீவு கண்டுபிடிப்பு!. அட்லாண்டிஸ் மர்மம் தீர்ந்ததா?

English Summary

When the moon comes closest to the Earth, the event is referred to as a ‘blue moon’ or supermoon.

Chella

Next Post

சூப்பர் திட்டம்...! ஆடுகள்‌ வாங்குவதற்கு ரூ.15,000 மானியம் வழங்கும் தமிழக அரசு...!

Mon Aug 19 , 2024
Government of Tamil Nadu will provide subsidy of Rs.15,000 for purchase of goats.

You May Like