fbpx

நாளை (ஆக.30) வானில் நிகழப்போகும் அதிசயம்..!! சூப்பர் ப்ளூ மூன்..!! வெறும் கண்களால் பார்க்க முடியுமா..?

விண்ணில் மிகவும் அரிதாக நடைபெறக்கூடிய நிகழ்வு ஒன்று நாளை நிகழப் போகிறது. அதாவது, ஆகஸ்ட் 30ஆம் தேதி சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் சூப்பர் நீல நிலவு தோன்ற உள்ளது. இதனை நாம் சாதாரணமாக கண்களால் பார்க்க முடியும். வழக்கமாக தோன்றும் பௌர்ணமியை விடவும் நாளை நிலவு கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக தெரியும்.

இந்த மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது பௌர்ணமியாக இது அமைகிறது. இம்மாத தொடக்கத்தில் நிலவு பௌர்ணமியாக இருந்தபோது பூமியில் இருந்து 3,57,530 கிமீ தொலைவில் இருந்தது. நீல நிலவான நாளை இன்னும் பூமிக்கு பக்கத்தில் வந்து 3,57,244 கிமீ தூரத்தில் இருந்து நிலவு பிரகாசிக்கும்.

நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து அதே நேரம் பௌர்ணமியாக நிலவு காட்சியளித்தால் அதனை ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது. நீள் வட்டப்பாதையில் பூமியை நிலவு 4,05,696 கிமீ தூரத்திலும், நாளை சூப்பர் ப்ளூ மூன் தினத்தன்று 3,57,244 கிமீ தூரத்திலும் பூமியை வலம் வரும். இதுபோன்ற நிகழ்வுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது.

கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ப்ளூ மூன் தெரிந்தது. அதைத் தொடர்ந்து நாளை நிகழவுள்ளது. அதன் பின்னர் 2024ஆகஸ்டில் சூப்பர் ப்ளூ மூன் தென்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வானில் தோன்றவுள்ள இந்த அரிய காட்சியை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க என்று நாசா உள்ளிட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறியுள்ளன.

Chella

Next Post

அவர் இருக்கிற வரைக்கும் நம்ம காதல் ஒன்னு சேராது….! தந்தையை கொலை செய்ய முயற்சித்த 16 வயது மகள்….!

Tue Aug 29 , 2023
காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற தந்தையை காதலனோடு சேர்ந்து, தீர்த்துக்கட்ட முடிவு செய்த 16 வயது சிறுமி. அதாவது, தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருபவர் வேணுகோபால் பாண்டியன் (55). இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவியும், இரு மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய மகளான 16 வயது சிறுமி, தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த முத்து காமாட்சி (23) என்பவரை காதலித்து வந்ததாக […]

You May Like