தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்குமே பணத் தேவை என்பது அவசியமாக பார்க்கப்படுகிறது. அதை சமாளிக்க யாரிடமாவது கடன் வாங்குவார்கள். பெரும்பாலான மக்கள் தங்களுடைய பெரியளவிலான பணத் தேவையை சமாளிக்க வங்கிகளில் கடன் வாங்குவார்கள். குறிப்பாக, ஐடிபிஐ வங்கியில் இருந்து நீங்கள் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். அதற்கு விண்ணப்பிப்பதும் எளிதான ஒன்றுதான்.
ஐடிபிஐ வங்கியில் வீட்டில் இருந்தபடியே கடன் பெறலாம். ஐடிபிஐ வங்கியில் கணக்கு இல்லையென்றாலும் கூட, அந்த வங்கியின் தனிநபர் கடனை நீங்கள் பெறலாம். இந்த வங்கியில் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்த கடனுக்கான வட்டி விகிதமும் குறைவு தான். இந்த கடனுக்கான உங்கள் CIBIL மதிப்பெண் 650 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். இந்த கடன் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கும்.
தேவையான ஆவணங்கள் :
* ஆதார் கார்டு
* பான் கார்டு
* வங்கிக் கணக்கு
* ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்
* வணிகர்களுக்கு 3 மாத வங்கி அறிக்கை
* வேலை செய்பவர்களுக்கு 3 மாத சம்பள சீட்டு
என்ன தகுதி வேண்டும்..?
ஐடிபிஐ வங்கியில் கடன் பெறுபவர்கள், இந்தியாவில் வசிக்க வேண்டும். மாத வருமானம் 15,000 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு வணிகத்தை நடத்துகிறீர்கள் என்றால், உங்கள் மாத வருமானம் 25,000 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்..?
முதலில் உங்கள் கணினி அல்லது மொபைலில் இணையத்தை திறந்து ஐடிபிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பிறகு, முகப்பில் உள்ள ‘லோன்’ என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதில், தனிநபர் கடன் விருப்பத்தை கிளிக் செய்த பிறகு, ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில், நீங்கள் வட்டி விகிதம், கடன் தொகை மற்றும் பிற தேவையான தகவல்களை பெறுவீர்கள்.
அதில் ‘Personal Loan’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிக்க “Apply online” விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஒரு விண்ணப்பப் படிவம் திறக்கும். இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை சரியாக நிரப்பவும்.
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்த பிறகு, “Submit” என்பதை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பம் சரியாக இருந்தால், உங்கள் கடன் அங்கீகரிக்கப்படும். கடன் அங்கீகரிக்கப்பட்டதும், பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு உடனே மாற்றப்படும்.
Read More : சுயதொழிலை ஊக்குவிக்கும் ’முத்ரா கடன்’ திட்டம்..!! இனி இது இருந்தால் தான் பணம் கிடைக்கும்..!!