fbpx

சூப்பர் நியூஸ்…! தமிழக அரசு வழங்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை…! எப்படி பெறுவது…? முழு விவரம்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடம் இருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம்‌ வகுப்பு (தோல்வி), பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி மற்றும்‌ அதற்கும்‌ மேலான கல்வித்‌ தகுதிகளை பெற்றவர்கள்‌ வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகள்‌ நிறைவடைந்த பின்னர்‌ வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும்‌ இளைஞர்களுக்கும்‌, வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்து ஓர்‌ ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும்‌ தமிழக அரசால்‌ உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெற மனுதாரரின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.72,000 /- க்கு மிகாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌ தாழ்த்தப்பட்ட மற்றும்‌ பழங்குடியின மனுதாரர்கள்‌ 45 வயதிற்குள்ளும்‌, இதர இனத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ 40 வயதிற்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மாதமொன்றுக்கு பத்தாம்‌ வகுப்பு தோல்விக்கு ரூ.200, பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, மேல்நிலைக்‌ கல்வி தேர்ச்சிக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 வீதம்‌ காலாண்டிற்கு ஒருமுறை பயனாளிகளின்‌ வங்கிக்கணக்கில்‌ நேரடியாக செலுத்தப்படும்‌.

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம்‌ வகுப்பு தோல்வி மற்றும்‌ தேர்ச்சிக்கு ரூ.600, மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750 மற்றும்‌ பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000 வீதம்‌ மாதந்தோறும்‌ வங்கிக்கணக்கில்‌ நேரடியாக செலுத்தப்படும்‌. பொறியியல்‌, மருத்துவம்‌, கால்நடை மருத்துவம்‌, விவசாயம்‌, சட்டம்‌போன்ற தொழிற்‌ பட்டப்‌ படிப்புகள்‌ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. மேலும் www.tnvelaivaaipu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

நோட்...! நாடு முழுவதும் 8 முக்கிய உற்பத்தி துறைகளின் வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு...!

Fri Jun 2 , 2023
இந்தியாவில் 2023 ஏப்ரல் மாதத்தில் முந்தையை 2022 ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், 8 முக்கிய உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன் படி, உரம், எஃகு, சிமெண்ட், நிலக்கரி ஆகிய துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்கள், மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி சற்று சரிந்துள்ளது. நிலக்கரி உற்பத்தி முந்தைய […]

You May Like