fbpx

தோன்றி மறையும் மாயத் தீவு!… திணறும் அறிவியல் ஆய்வுகள்!… உண்மை என்ன?

உலகத்தில் எந்த ஒரு மூலையில் பிறந்த மனிதரும் பரந்து விரிந்த உலகத்தில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும், யாருடைய உதவியுமின்றி ஒரு ஸ்மார்ட்போனையும் இணையத்தையும் நம்பி பயணித்துவிட முடியும் என்கிற சூழலை உருவாக்கிய ஓர் அற்புதமான அறிவியல் படைப்பு தான் கூகுள் மேம்ஸ். ஆனால் பல நேரங்களில் இதே கூகுள் மேப்ஸ் வேடிக்கைக்குரிய அல்லது ஆச்சரியமான விஷயங்கள் பலவற்றை வெளிக்கொண்டு வந்துள்ளது.

அப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தீவு வடிவத்தில் ஓர் ஆச்சரியமான விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளது. சாண்டி ஐலேண்ட் என்கிற பெயரில் ஒரு குட்டி தீவு போன்ற நிலப்பரப்பு கூகுள் மேப்ஸில் தென்பட்டது. இந்த தீவு அவ்வப்போது கூகுள் மேப்ஸில் தென்படுவதும் மறைவதுமாக இருந்து வந்தது. எனவே இந்த தீவு குறித்து புரிந்து கொள்ளமுடியாமல் அறிவியல் சமூகம் இன்றுவரை திணறிக் கொண்டிருக்கிறது.

இந்த அதிசய தீவு ஆஸ்திரேலியா மற்றும் நியூ கலிடோனியா என்று அழைக்கப்படும் தீவுக்கு இடையில் தென்படுகிறது. இந்த தீவு இன்றோ நேற்றோ கண்டுபிடிக்கப்படவில்லை 1776 ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த கடற்பயணி கேப்டன் ஜேம்ஸ் குக் தன்னுடைய தெற்கு பசிபிக் பெருங்கடல் கண்டுபிடிப்புகள் குறித்த குறிப்பு ஒன்றில் இந்த தீவு பற்றி குறிப்பிட்டுள்ளார். 1876 ஆம் ஆண்டு மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகினர் கூட, அந்த இடத்தில் தீவு இருந்ததை பார்த்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அவ்வளவு ஏன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டன் மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த பல வரைபடங்களிலும் அந்த தீவு பிரதிபலித்தது. 1895ஆம் ஆண்டு கூட சாண்டி ஐலேண்ட் தீவு ஏற்பட்டதாகவும் அது சுமார் 24 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 5 கிலோ மீட்டர் அகலம் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அறிவியல் தரப்பினருக்கு இப்படி ஒரு தீர்வு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய ஆர்வம் ஏற்பட்டது. கடந்த நவம்பர் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு அந்த அதிசய தீவு இருப்பதாக குறிப்பிடப்படும் இடத்திற்குச் சென்றனர்.

பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். ஆச்சரியமாக அந்த இடத்தில் தீவு எதுவும் இல்லை. மணல் திட்டுக்கள் ஏதாவது இருக்கின்றனவா என அப்பகுதியில் ஆழத்தைப் பரிசோதித்தபோது சுமார் 4,300 அடி ஆழம் இருந்ததாம். இதுவரை இந்த குழப்பத்திற்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் இல்லை. தீவு போல காணப்பட்ட பகுதி கடலுக்கு அடியில் இருந்த எரிமலைகளின் எச்சங்களாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

Kokila

Next Post

அமெரிக்க போர் கப்பலை நோக்கி ஏவுகணை தாக்குதல்..!! நடந்தது என்ன..? பெரும் பரபரப்பு..!!

Fri Oct 20 , 2023
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நடந்த வருகிறது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் இஸ்ரேல் நாட்டிற்கு அமெரிக்க நாடு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது ஈரான் நாடு நேரடியாக தலையிட்டுயுள்ளது, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகிறது. ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் இந்த ஏவுகணைகள் அந்த பகுதியில் இருந்த அமெரிக்க போர் கப்பலை நோக்கி வீசப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக […]

You May Like