fbpx

வழக்கறிஞர் வேடத்தில் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்து பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மர்ம நபர்

உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்ற வளாகத்தில் பிரபல ரவுடி சஞ்சீவ் ஜீவா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி சஞ்சீவ் ஜீவாவை சுடுவதற்காக திட்டமிட்டு வந்த குற்றவாளி வழக்கறிஞர் போல் வேடமிட்டு வந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால் ரவுடி சஞ்சீவ் ஜீவா நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழந்தார். அப்போது அங்கிருந்த சில நபர்கள் அந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அருகில் இருந்த காவல்துறையினர் அவரின் ரத்தத்தை நிறுத்த முயற்ச்சி செய்துகொண்டிருந்த போதே சஞ்சீவ் ஜீவா உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த காவல் துறை அதிகாரிகளுக்கு சிவில் கோர்ட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேற்கு உத்தர பிரதேச பகுதியில் பிரபலமன ரவுடியான சஞ்சீவ் ஜீவாவின் தலைமையில் ஒரு ரவுடி கும்பல் செயல்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சஞ்சீவ் ஜீவா பாஜக பிரமுகர் பிரம்மதத்தா திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வழக்கறிஞர் போல வேடமட்டு வந்து ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Rupa

Next Post

பிரபல தமிழ் யூடியூபர் மாடர்ன் மாமி கைது-  சப்ஸ்கிரைபர்ஸை ஏமாற்றி ரூ.41 லட்சம் மோசடி!

Wed Jun 7 , 2023
யூடியூப் சேனலில் 1200 ரூபாய் முதலீடு செய்தால் 20 நாட்களில் அதிக பணம் திருப்பித் தரப்படும் என்று கூறி விளம்பரம் செய்து பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த பிரபல தமிழ் யூடியூபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஹேமலதா தம்பதி, கடந்த 2020 ஆம் ஆண்டு மாடர்ன் மாமி என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளனர். இந்த யூடியூப் சேனலில் […]

You May Like