fbpx

அச்சுறுத்தும் ஹூண்டாய் காரில் நிர்வாணமாக உலா வரும் பெண் அகோரி..!! இந்த காரில் இத்தனை அம்சங்களா..?

இந்தியா முழுவதும் பிரபலமான கோயில்களுக்கு சென்று தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமான இருப்பவர் பெண் அகோரி நாகசாது. இவர், சமீபத்தில் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தார். ஆனால், அவர் நிர்வாணமாக கோயிலுக்குள் நுழைய முயன்றதால், அவரை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலானது.

மேலும், கோயிலுக்குள் தன்னை அனுமதிக்காவிட்டால், தீக்குளிப்பேன் என்று கூறி மிரட்டினார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், அவரை சமாதானப்படுத்தி அவருக்கு ஆடை அணிவித்து கோயிலுக்குள் செல்ல அனுமதித்தனர். முற்றும் துறந்து முழுவதுமாக கடவுள் மயமாக இருப்பவர்களே சன்னியாசி. ஆனால், இவர் சற்று வித்தியாசமாக இருக்கிறார். அவர், சொகுசான காரில் மட்டுமே கோயிலுக்கு சென்று வருகிறார். மேலும், விலை உயர்ந்த செல்போனை பயன்படுத்தி வருகிறார்.

இந்த பெண் அகோரி பயன்படுத்தி வருவது ஹூண்டாய் ஐ20 கார் மாடல் ஆகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தகைய காரையே அவர் பயன்படுத்தி வருகிறார். மேலும், அச்சுறுத்தும் வகையில் ஆக்ரோஷமாக இருக்கக் கூடிய காளி படத்தையும், அபாய சின்னங்களையும் கார் முழுவதும் ஒட்டியுள்ளார். காரின் வெளிப்புறம் மட்டுமல்ல. உள்புறமும் அச்சுறுத்தும் வகையிலேயே உள்ளது.

இந்தியாவில் ஹூண்டாய் ஐ20 காரின் விலை ரூ. 7.04 லட்சம் ஆகும். இந்த காரில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜர், 26.03 செமீ அளவு கொண்ட டச் ஸ்கிரீன், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 7 ஸ்பீக்கர்கள் கொண்ட Boss பிரீமியம் சவுண்டு சிஸ்டம், சன் கிளாஸ் தாங்கிகள் என ஏராளமான அம்சங்கள் இந்த காரில் உள்ளன. மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏர் பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Read More : பெண்களே..!! வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ரூ.35 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்..!! முதலீடும் கம்மிதான்..!!

English Summary

A female Aghori Nagasadu has visited famous temples across India and is currently popular on social media.

Chella

Next Post

பதேர் பாஞ்சாலி புகழ் உமா தாஸ்குப்தா புற்று நோயால் மரணம்..!!

Tue Nov 19 , 2024
Bader Panjali' fame Uma Dasgupta dies of cancer

You May Like