fbpx

’ரேஷன் பொருட்கள் பெறுவதில் வந்தது புதிய மாற்றம்’..!! அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு..!!

இனி கருவிழிப் பதிவு மூலம் ரேஷன் வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பயோ மெட்ரிக்குடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 36,000 ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்கடி செயலிழந்து விடுகிறது. இதனால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. எனவே, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அடுத்த இரண்டு மாதத்திற்குள் 36,000 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோகத் திட்டத்தை சீரமைத்து தமிழக மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக எல்லா ரேஷன் கடைகளிலும் கருப்பு மற்றும் பழுப்பு அரிசிகளை நீக்கி தரமான அரிசி வழங்கப்படுகிறது.

தேர்தல் அறிக்கையில் சொன்னதை போல, குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு 15 நாட்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை 14 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை நகல் பெற தபால்துறை மூலம் விண்ணப்பித்தாலே போதும். அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

Chella

Next Post

ஓலா, ஊபர் சேவை கட்டணம் இரு மடங்கு உயர்வு..!! ஒரே அடியாக ரூ.600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!!

Wed Oct 18 , 2023
ஓலா, ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் செயலியை பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால், அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட […]

You May Like