fbpx

இபிஎஸ்-க்கு ஆப்பு!… மீண்டும் இரட்டை தலைமையில் அதிமுக?… யார் யார் தெரியுமா?… பாஜகவின் பலே திட்டம்!

ADMK: தேர்தலுக்கு பின் செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என்று செய்திகள் வருவதாக கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக – பாமக உள்ளிட்ட கட்சி கூட்டணியுடன் களமிறங்கின. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக, மநீம, விசிக, உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்றன. அதன்படி, இம்முறை பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டுள்ளது.

இந்தநிலையில், தேர்தலுக்கு பின் செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என்று செய்திகள் வருவதாக கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பேசிய அமைச்சர் ரகுபதி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

திமுக அரசின் மூன்றாண்டுகல ஆட்சிக்கு கிடைத்த பரிசு. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்ற வேண்டும். அப்பொழுது தான் உண்மையான எதிர்க்கட்சியாக இருக்கும். அதை விட்டுவிட்டு வேறு விதமான விமர்சனங்கள் அவர் ஈடுபட்டால், அவருடைய பதவிக்கு அது ஆபத்தாக அமைந்துவிடும்.

இருந்தாலும் அவருடைய பிறந்த நாளில் அவருடைய பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று சொல்வது அழகல்ல. அவர் பல நாட்கள் வாழ வேண்டும் என்று திமுக சார்பில் வாழ்த்துகிறோம். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, செங்கோட்டையன் தலைமையில் செல்கிறதா? அல்லது வேலுமணி தலைமையில் செல்கிறதா? என்பது தெரியவரும். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக செங்கோட்டையன் பொறுப்பேற்க வேண்டும் என்று ஏற்கனவே ஜெயக்குமார் சொல்லியிருக்கிறார். அதை திமுக செய்ய மாட்டோம். ஆனால் பாரதிய ஜனதா கட்சி செய்யும் என்றார்.

Readmore: விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லை!… ஆனால், சூரியன் எப்படி எரிகிறது?… நாசாவின் பதில் இதோ!

Kokila

Next Post

"ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!" -முதலமைச்சர் ஸ்டாலின்

Sun May 12 , 2024
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதில், உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு அம்மா” “தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் […]

You May Like