fbpx

’உங்கள் ரேஷன் கார்டுக்கு வந்த புதிய ஆபத்து’..!! வெளியான முக்கிய அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!!

தொடர்ந்து 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக எந்தவித பொருட்களும் வாங்கவில்லையெனில் ரேஷன் கார்டு ரத்தாக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது, ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில், அரசு ரேஷன் கார்டுகளை ரத்து செய்து வருகிறது. இந்நிலையில், கேரளா அரசு Operation Yellow என்கிற பெயரில் தகுதியில்லாத ரேஷன் கார்டுகளை ரத்து செய்து வருகிறது.

அதாவது, கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் மாதத்தில் மட்டுமே 17,696 ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகளில் சிக்கும் ரேஷன் கார்டுதாரர்கள் மூலமாக ரூ. 4 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. மேலும், தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் ரேஷன் கார்டு மூலமாக எந்த பொருட்களும் வாங்கவில்லை எனில் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு முழு பலன் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை..!! எப்படி பெறுவது..? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!

Tue Aug 8 , 2023
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2023 – 24ஆம் நடப்பு கல்வியாண்டில் 11ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]

You May Like