fbpx

வரலாறு காணாத புதிய உச்சம்.. இன்றும் தங்கம் விலை உயர்வு.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,565க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 1.30 காசுகள் அதிகரித்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500க்கு விற்பனையாகிறது.

மார்ச் 20ல் ஒரு சவரன் தங்கம் விலை, ரூ.44,640 ஆக இருந்த நிலையில் இன்று புதிய உச்சமாக ரூ.44,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம் என்ற அறிவிப்பின் எதிரொலியாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது..

Maha

Next Post

கொளுத்தும் வெயில்..!! முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..?

Fri Mar 31 , 2023
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது. பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக கேள்விகளுக்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார். அதிலும் குறிப்பாக பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி […]

You May Like