fbpx

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்ககடலில் வரும் 16ஆம் தேதி இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்ச்சியின் காரணமாக இன்று அதிகாலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி தென்கிழக்கு வங்ககடல் அதனை ஒட்டிய அந்தமான் கடல்பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதாகவும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரக்கூடிய 16ஆம் தேதி மத்திய மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடிய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இல்லாது, மேலும் மழையை ஏற்படுத்த கூடிய காரணியாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Chella

Next Post

அதிர்ச்சி..!! இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! பீதியில் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்..!!

Tue Nov 14 , 2023
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து தென் கிழக்கில் 1326 கி.மீ. தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2ஆக பதிவாகியுள்ளது. கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் சேதம் இருக்காது என தெரிகிறது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இதற்கிடையே இலங்கையில் இன்று (நவ.14) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழ்வு காரணமாக மழைப்பொழிவு அதிகம் இருக்கும் […]

You May Like