இந்தியாவின் பணக்கார குடும்பமான முகேஷ் அம்பானி குடும்பத்தில் 3 பிள்ளைகளுக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் ஈஷா ஆம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் மட்டுமே ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மொத்த சந்தை மதிப்பீட்டில் சுமார் 70 சதவீத சந்தை மதிப்பீட்டை கொண்டு உள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி நுகர்வோர் சந்தையில் இருந்து உருவாகும் என்பதை ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில் இத்துறையின் நிலையான வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட இக்குழுமத்தின் நிதி சேவை பிரிவான ரிலையன்ஸ் ஸ்ட்ராடஜிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ்-ஐ தனியாக பிரித்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற பெயர் மாற்றத்துடன் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
இந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் டைரக்டராக முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா அம்பானி நியமிக்கப்பட்டு உள்ளார். ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் அடித்தளமாக இருக்கும் இந்நிறுவனத்தில் ஈஷா அம்பானி நியமனம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஈஷா அம்பானி உடன் முன்னாள் சிஏஜி உயர் அதிகாரி ராஜீவ் மெஹ்ரிஷி டைரக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் இந்த முக்கியமான நிதி சேவை பிரிவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளார் ஹிதேஷ் குமார் சேத்தியா. ஹிதேஷ் குமார் சேத்தியா நியமனத்திற்கு ஆர்பிஐ உட்பட பல அமைப்புகள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும், அதுவரையில் ஹிதேஷ் குமார் சேத்தியா-வும் டைரக்டராக இருப்பார்.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் முதல் கட்டமாக தனது ரிலையன்ஸ் ரீடைல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு NBFC-ஆக இருந்து கன்ஸ்யூமர் லோன் அளிக்க உள்ளது. இதன் மூலம் பஜாஜ் பைனான்ஸ் உடன் நேருக்கு நேர் போட்டிப்போடுவது மட்டும் அல்லாமல் இந்தியாவில் 5வது அதிக மதிப்புடைய நிறுவனமாக இருக்கும். கன்ஸ்யூமர் லோன் பிரிவின் வெற்றியை தொடர்ந்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இன்சூரன்ஸ், பேமெண்ட்ஸ், டிஜிட்டல் ப்ரோகிங், அசர்ட் மேனேஜ்மென்ட் ஆகிய பிரிவிலும் இறங்க உள்ளது. இதன் மூலம் பேடிஎம் நிறுவனத்துடனும் போட்டிப்போட உள்ளது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம்.