fbpx

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை..!! ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்..!! யாருன்னு தெரியுமா..?

பேட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் படைத்துள்ளார்.

துபாயில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள 16-வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களை வாங்க 10 அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுவரை அதிகபட்சமாக டேரல் மிட்சல் ரூ.14 கோடிக்கு சென்னை அணியும், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஹைதராபாத் அணியும் ஏலத்தில் எடுத்தன.

இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றிருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக அந்த சாதனையை மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். ரூ.2 கோடி அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்ட அவரது ஏலம் தொடங்கியதும் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் போட்டி போட்டன. விலை ரூ.9.6 கோடியை கடந்ததும் டெல்லி அணி பின் வாங்கியது. ஆனால், யாரும் எதிர்பாராமல் கொல்கத்தா அணி விலை கேட்டது.

குஜராத் மற்றும் கொல்கத்தா அணியிடையே நடந்த கடும் போட்டியில், ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு போன வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.

Chella

Next Post

”இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப்போகுது”..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Tue Dec 19 , 2023
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளை கரைபுரண்டோடுகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, கடந்த 2 தினங்களாக […]

You May Like