வங்கக்கடலில் உருவாக உள்ள மோக்கா புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்
புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்றமைக்கு, தேர்வுக்கு பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களுக்கும், நன்றாக படித்து தேர்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், தனியார் பள்ளி நடத்தும் நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டம் என்றும் அதனால்தான் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இன்று மோக்கா புயல் உருவாவது குறித்த முன்னேற்பாடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புயலால் எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்றார். புயலால் நமக்கு நல்ல மழை கிடைப்பதோடு தண்ணீருக்காகக் கர்நாடகாவை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக இல்லை” என்று தெரிவித்தார்.