fbpx

உருவாகிறது புதிய புயல்..!! புரட்டி எடுக்கப்போகும் அதி பயங்கர மழை..!! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருவதால், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நவ.22) மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில், தற்போது புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இப்படி தேர்வு நடத்துனா எப்படி..? டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும்.. காத்திருக்கும் தேர்வர்களும்..!!

Wed Nov 22 , 2023
தமிழ்நாடு அரசில் இளநிலை உதவியாளர் தொடங்கி துணை ஆட்சியர் வரையிலான பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். லட்சக்கணக்கானவர்கள் போட்டியிடும் இத்தேர்வுகள் தொடர்பான திட்ட அறிக்கையை, டிஎன்பிஎஸ்சி ஆண்டுத்தோறும் வெளியிடுகிறது. ஆனால், திட்ட அறிக்கைக்கும் நடைமுறைக்கும் நீண்ட இடைவெளி இருப்பதாக விமர்சனங்கள் உள்ளன. அதிலும், டிஎன்பிஎஸ்சியின் குரூப்-1, குரூப்-2, குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகியவற்றை முறையான கால இடைவெளி மற்றும் வரிசைப்படி நடத்தாததால், தேர்வர்கள் […]

You May Like