fbpx

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்; வெளியான சிசிடிவி ஆதாரத்தால் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு ஏழு மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் ஸ்ரீமதி தாய் செல்வி தரப்பு பேசியதாக ஆதாரம் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உள்பட ஒன்பது பேர் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு உள்ளனர். ஸ்ரீமதி ஜூலை 13-ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அன்றைய தினமே பேச்சுவார்த்தை நடந்த காட்சிகளும் வெளியாகி உள்ளன. பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து பேசவில்லை என ஸ்ரீமதி என் தாய் செல்வி குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் தற்போது ஆதாரம் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், அந்த வீடியோவில் சக்தி மெட்ரிக் பள்ளியில் இருக்கும் ஆடிட்டோரியத்தில் பேச்சுவார்த்தை நடந்த சிசிடிவி காட்சிகளின் புகைப்படங்களும் வெளியிடப் பட்டுள்ளது. இதையடுத்து அந்த வீடியோவில், எதிர் தரப்பில் கள்ளக்குறிச்சி மகாபாரதி பள்ளி நிர்வாகி மோகன் மற்றும் சக்தி மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரின் உறவினர்கள் என்று நான்கு பேர் கலந்து கொண்டுள்ளனர்.

Rupa

Next Post

டிராஃபிக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவர் … 3 கிலோ மீட்டருக்கு ஓடியே மருத்துவமனைக்கு சென்று அறுவைசிகிச்சை செய்தார்..

Tue Sep 13 , 2022
பெங்களூருவில் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவர் ஒருவர் காரைவிட்டுவிட்டு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியே  மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சையை உரிய நேரத்தில் செய்து முடித்துள்ளார். … பெங்களூருவில் மணிபால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார் கோவிந்த் நந்தகுமார். இவர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி முக்கியமான அறுவை சிகிச்சை நோயாளிக்கு மேற்கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில் அவர் வந்த கார் டிராஃபிக்கில் சிக்கிக்கிக் கொண்டது. சிறிது தூரம் […]

You May Like