fbpx

புதிய வகை கொரோனா..!! மத்திய சுகாதாரத்துறை போட்ட அதிரடி உத்தரவு..!! பீதியில் பொதுமக்கள்..!!

புதிய வகையான கொரோனா ‘ஜே.என்.1’ பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உருமாறிய புதிய வகையான கொரோனா ‘ஜே.என்.1’ ல் பாதிக்கப்பட்ட முதல் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தீவிர கண்காணிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சுதான்ஷு பந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ”மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் கொரோனா தொற்று காலத்தின்போது உயிரிழப்புகளை குறைக்க முடிந்தது. இருப்பினும் உருமாறிய புதிய வகை கொரோனா தொடர்ந்து பரவி வருகின்றன. அண்மையில் கேரளாவில் மாநிலத்தில் அதிகரிக்க தொடங்கியது. புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த டிசம்பர்.8ஆம் தேதி கேரளத்தில் கண்டறியப்பட்டார். முன்னதாக திருச்சியிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணியிடம் இதே புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது.

நாட்டில் பண்டிகை காலம் வருவதையொட்டி தொற்றின் பரவலைத் தடுக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும். தீவிர கண்காணிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். மாவட்டந்தோறும் இன்ப்ளூயன்ஸா மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்புகள் குறித்து கண்காணிப்பதுடன் தினசரி அறிக்கை வெளியிட வேண்டும். இந்தியாவில் தற்போது பிஏ.2.86 வகை கொரோனா ‘ஜெஎன்.1’ கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல் ஜே.என்.1 வகை கொரோனா பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கான சான்றுகள் இல்லை. எனவே, நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளாலும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளாலும் இவ்வகை கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க இயலும்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோகிறது..? தேர்தலில் போட்டியிடவும் தடை..? டிச.21இல் தீர்ப்பு..!!

Tue Dec 19 , 2023
2006-2011ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. […]

You May Like