புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கேரளா மற்றும் தமிழ்நாடில் பரவி வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய வைரஸ் தொற்று ஒன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பரவி வருகிறது. கேரளாவில் 230 எண்ணிக்கையில் உயர்ந்திருப்பதாக தெரிவித்தார். தமிழ்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி, பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததாகவும், இந்த புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு எதுவும் இல்லை என கேரளா அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறினர்.
பெரியளவில் பாதிப்பு இல்லாததால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் காய்ச்சல் எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையை அதிகப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பல்வேறு விதமான உருமாற்றங்களை பெற்று வருகிறது. தற்போது இருப்பது எந்த மாதிரியான உருமாற்றம் என்பது குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.