வாட்ஸ் அப் மூலமாக நேரடியாக புகைப்படம் மட்டுமே எடுக்கும் வசதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வீடியோ எடுக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் செயலியில் தொடர்ந்து அவ்வப்போது பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, பயனாளர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பயனாளர்களின் வசதிக்காகவும் பல அப்டேட்டுகள் வெளியாகின்றன. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் கணக்கில் வீடியோ செய்தியை பதிவு செய்யும் திறன் கொண்ட அப்டேட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது வரைக்கும் வாட்ஸ் அப் செயலியின் மூலமாக நேரடியாக புகைப்படம் மட்டுமே எடுக்க முடியும்.
ஆனால், தற்போது வாட்ஸ்அப் கணக்கின் மூலமாக வீடியோ செய்தியையும் பதிவு செய்யும் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவும் அப்டேட்டும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாட்ஸ்அப் செயலியின் மூலமாக எடுக்கப்படும் வீடியோக்களை நேரடியாக மற்ற 3-ம் தரப்பு செயலிகளுக்கு பார்வேர்ட் செய்ய முடியாது. மேலும், பயனர்கள் இந்த வீடியோக்களை ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் தான் சேமித்து கொள்ள முடியும்.