fbpx

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களையும் பாதிக்கும் புதிய வேரியன்ட் FLiRT!

தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிறழ்வை புதிய வேரியன்ட் கொண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகையே புரட்டி போட்ட கொரோனாவை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கொரோனா பாதிப்புகள் முன்பை விட தீவிரமாக இல்லை என்றாலும், இன்னும் அந்த கொடிய தொற்று நம்முடனேயே தான் வாழ்ந்து வருகிறது என்று நிபுணர்கள் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தான், சமீபத்தில் அமெரிக்காவில் கோவிட்-ன் 2 புதிய வேரியன்ட்ஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. “FLiRT” என குறிப்பிடப்படும் இந்த இரண்டு வேரியன்ட்ஸ்களிலும் KP.2 அடங்கும். மேலும், இது சமீபத்திய வாரங்களில் ஒமைக்ரானின் JN.1 சப்வேரியன்ட்டை முந்தியது.

தொண்டை வலி, இருமல், சோர்வு, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தலைவலி, தசைவலி, காய்ச்சல் மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு போன்ற மற்ற ஒமைக்ரான் சப்-வேரியன்ட்ஸ்களின் அறிகுறிகளைப் போலவே புதிய FLiRT வேரியன்ட்ஸ் அறிகுறிகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வேரியன்ட்டின் பாதிப்பு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் தென் கொரியாவில் அதிகரித்து வருகிறது. மேலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.   பொதுவாக நோய் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதுண்டு. அதோடு முந்தைய நோய்த்தொற்றுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நோயை எதிர்த்துப் போராடக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும். இந்தத் தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி மக்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிறழ்வை இந்த வேரியன்ட் கொண்டிருக்கிறது. 

இந்த வேரியன்ட் 50% மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, `கோவிட் தொற்று எண்ணிக்கையில் சிறிதளவு அதிகரிப்பு மட்டுமே உள்ளது. இதனால் பீதி அடையத் தேவை இல்லை.  தவிர, தற்போதைய இந்தத் திரிபு லேசான அறிகுறிகளை மட்டுமே ஏற்படுத்துகிறது’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

நடுவானில் பயங்கரம் ; கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம்..! பயணி ஒருவர் பலி

Next Post

காலிஸ்தான் பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் உட்பட 3 பேர் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Tue May 21 , 2024
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது மூன்று உதவியாளர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பஞ்சாப் மற்றும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட அர்ஷ்தீப் இயக்கிய ஸ்லீப்பர் செல்களை நடுநிலையாக்குவதற்கான விசாரணை […]

You May Like