குஜராத்தில் பிரதமர் நரேந்திரமோடி வருகையை ஒட்டி மருத்துவமனையில் ஒரே ராத்திரியில் மருத்துவமனையை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பளபளவென மாற்றியுள்ளனர்.
குஜராத்தின் மோர்பி பகுதியில் பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டதில் 141 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பா.ஜ.க. எம்.பி.யின் உறவினர்கள் 12 பேர் உயிரிழந்தனர். 170க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில்சந்திக்க வருகை தருகின்றார். இந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனையை புதுப்பிக்கும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டது.
குஜராத் அரசு மருத்துவமனை ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகின்றது. வெளிப்புறத் தோற்றமும் பயங்கரமாக இருந்தது. உள்புறத்தில் பராமரிப்பு பணியின்றி காணப்பட்டது. அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை. படுக்கைகள் பழைய பெட்ஷீட்டுகள் அப்படியே கிடந்தன.

மோடி வருகின்றார் என்ற செய்தி பரவியதும் உடனடியாக பணியாட்களுக்கு உத்தரவிடப்பட்டது. புதியதாக வண்ணம் தீட்டும் பணியில் உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்டது. புதிய பெட்ஷீட்டுகள் வாங்கி கட்டிலுக்கு போடப்பட்டது. ஆங்காங்கே சிதிலமடைந்தவற்றை சீர்படுத்தி வண்ணம் தீட்டப்பட்டது. புதியதாக டைல்ஸ் போடும் பணிகள் நடைபெற்றது. இவை அனைத்தும் ஒரே இரவில் முழுவீச்சில் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தண்ணீர் குடிப்பதற்கு புதிய வாட்டர் கூலர்கள் வாங்கி வைக்கப்பட்டது. ஒரே இரவில் மிகப்பெரிய அளவில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இதை ஆம் ஆத்மி கட்சி படம்பிடித்து டுவிட்டர் வலைத்தலத்தில் பதிவிட்டுள்ளது. ’’141 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை. அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள். இதை விட்டு விட்டு பா.ஜ.க. தொண்டர்கள் பின்னர் நடக்க உள்ள போட்டோ ஷுட்டுக்கு மருத்துவமனையை தயார் செய்கின்றனர்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியும்இந்த செயலை கண்டித்துள்ளது. புதிய டைல்ஸ் பதிக்ப்பட்டுள்ளது. ’ இதற்கெல்லாம் பா.ஜ.க. வெட்கப்படாது. ஏராளமானோர் இறந்துவிட்டனர். அடுத்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். என்று தெரிவித்துள்ளது.