fbpx

கள்ளக்காதலுடன் தலைமறைவான ஊராட்சி மன்ற தலைவி..!! தேடி அலைந்த போலீஸ்.. இறுதியில் நடந்த டிவிஸ்ட்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள38 வயதான ஊராட்சி தலைவி(38), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை விட்டுவிட்டு, 22 வயதான கள்ளக் காதலனுடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியின் தலைவிக்கு 38 வயதாகிறது. திருமணமாகி கணவருடன் வசித்த அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தனது கள்ள காதலனுடன் தலைமறைவானார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவியின் குடும்பத்தினர் நாமக்கல் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர். போலிஸார் ஊராட்சி மன்ற தலைவியின் செல்போன் சிக்னலை கண்காணித்து வந்தனர். அந்த சிக்னல் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே உள்ள பகுதிகளை குறிக்க ஆரம்பித்தது. இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அந்த இடத்திற்கு சென்றபோது, அங்கு ஒரு மதவழிபாட்டு தலத்தின் அருகே செல்போனை வைத்திருந்த 22 வயயதான நபரை பிடித்தனர். வாலிபரை மடக்கி ஊராட்சி தலைவியை எங்கே என்று கேட்டனர்.

விசாரணையில் அந்த நபர், ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் எல்.மாங்குப்பத்தில் வசித்து வருவதாகவும், சில நாட்களுக்கு முன்பு புது செல்போன் எண்ணை ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும் தெரிவித்தார். அந்த எண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘இன்வேலிட் நம்பராக’ கருதி எல்.மாங்குப்பம் வாலிபருக்கு கம்பெனி வழங்கியது தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களை அந்த வாலிபர் காட்டியபிறகு அவரை விடுவித்து போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர். மாயமான ஊராட்சி தலைவியையும் வாலிபரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Read more ; காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு..!!

English Summary

A panchayat headwoman (38) in Namakkal district left her husband and went into hiding with a 22-year-old lover.

Next Post

ஹிஸ்புல்லா தாக்குதல்!. இஸ்ரேலிய கமாண்டர் உட்பட 15 வீரர்கள் பலி!.

Thu Oct 3 , 2024
Hezbollah attack!. 15 soldiers, including the Israeli commander, were killed!

You May Like