சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், ஏலியனுக்கு கோயில் கட்டி பூஜை செய்து வருகிறார். இந்த கோயிலை ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என்று அழைக்கின்றனர். கடந்த 2021 முதல் இந்த கோயில் கட்டும் பணி நடைபெற்று வந்தது. சிவலிங்கத்தில் இருந்து பூமிக்கு அடியில், 11 அடி ஆழத்தில், அவரது குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமாதி அருகே ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது நித்ய பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் லிங்கம், சித்தர், முனிவருக்கு தேய்பிறை, வளர்பிறை பஞ்சமி திதியில், மாலை, 6:00 மணிக்கு பூஜை நடத்தி அன்னதானமும் வழங்கப்படுகிறது. இந்த கோயில் குறித்து லோகநாதன் கூறுகையில், “இதுவரை எந்த இடத்திலும் ஏலியன் சித்தர் இல்லை. தற்போது, கோயிலில் திருப்பணி பூஜை நடந்து வருவதால், குறைந்த அளவு பூஜை செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து விதமான பூஜைகளும் செய்யப்படும். இனிமேல் ஏலியன்களின் வருகை அதிகமாகும். இவர்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்க மாட்டார்கள். உலக அழிவிலிருந்து காக்கும் ஒரே தெய்வம் ஏலியன் மட்டுமே” என்றார்.
Read More : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! இன்று முதல் சம்பவம் இருக்கு..!! வானிலை அலர்ட்..!!