Mosquitoes: டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு கிராமத்தில் கொசுக்களை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறது.
உலக முழுவதுமே கொசுவால் ஏற்படும் நோய்களும் அதிகம். இவை சுகாதாரத்திற்கு சீர்கேடு விளைவிப்பதுடன், டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்புகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.கொசுவை தடுப்பதற்கு செயற்கையான பல திரவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இவை சுவாச பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும். குறிப்பாக, ஆஸ்துமா நோயாளிகள் போன்றோர் இதனால் பாதிக்கப்படுவார்கள். அந்தவகையில், பிலிப்பைன்ஸில் கொசு தொல்லை அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக பிலிப்பைன்ஸ் மண்டலியோங் நகரில் அடிஷன் மலை கிராமத்தில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 42 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். டெங்குவால் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இது அந்த நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது இதனால் கொசுவை அழிக்க திட்டமிட்ட அந்த கிராமத்தின் தலைவர் யாரெல்லாம் 5 கொசுக்களைப் பிடித்து கொடுக்கிறார்களோ , அதாவது உயிரோடோ அல்லது உயிரில்லாமலோ அவர்களுக்கு 50 ரூபாய் பரிசு என்று அறிவித்தார். பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.