உலகக்கோப்பை டிராபியை தங்கள் தலைக்கு அருகே வைத்தபடி சூர்யகுமார் யாதவ்வும் அவருடைய மனைவி தேவிஷாவும் வீட்டில் உறங்கினர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் விராட் கோலி, அக்சர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி பெற்றுள்ளது. இதன் மூலம் 13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது.
இதனை இந்திய ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த போட்டியில் கடைசி ஓவரில் சூரியகுமார் யாதவ் பிடித்த கேட்ச்சால் இந்திய அணி வெற்றி என்பது உறுதியானது. பவுண்டரி எல்லைக்கு அருகே சென்ற பந்தை லாவகமாக பிடித்து அனைவரையும் வியக்க வைத்தார் சூர்யகுமார் யாதவ். இந்த நிலையில் உலகக்கோப்பை டிராபியை தங்கள் அருகே வைத்தபடி சூர்யகுமார் யாதவ்வும் அவருடைய மனைவி தேவிஷாவும் வீட்டில் உறங்கிய மாதிரியான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more l கைதியுடன் உடலுறவு கொண்ட பெண் காவலர்!! வெளியான பகீர் வீடியோ.. அதிகாரிகள் எடுத்த ஆக்ஷன்!