புனேவில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த போலீஸ் கான்ஸ்டபிளின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 5 பேரின் உயிர்களை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் நாயக். 38 வயதான இவர் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக உள்ளார். இந்தநிலையில், இவர் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். பலத்த காயமடைந்த இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், இவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து அவரது உறுப்புகள் தானம் வழங்க உறவினர்களிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி, இவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. அதன்படி, மூளைச்சாவு அடைந்த நாயக்கின் இதயம், ராணுவ ஜவான் நிலையில் உள்ளவருக்கு தானமாக வழங்கப்பட்டு இதயமாற்று அறுவை சிகிச்சை முடிந்தது. மேலும், போலீஸ் நாயக்கின் சிறுநீரகம், கணையம், கல்லீரல், ஜூபிடர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று புனேவில் உள்ள மண்டல மாற்று ஒருங்கினைப்பாளர் ஆர்த்தி கோகலே கூறினார்.