ஆந்திராவில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்த விவசாயிக்கு காவல்துறை அதிகாரி உரிய நேரத்தில் சிபிஆர் சிகிச்சை செய்து உயிர்ப்பிக்கச்செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் அமராவதி விவசாயிகள் மகா பாதயாத்திரை நடத்தினர். அப்போது காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர் கம்மன் பாலத்தில் விவசாயிகள் வந்து கொண்டிருந்தபோது விவசாயி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஹ்மேந்திர வர்மா உரிய நேரத்தில் வந்து அவருக்கு சி.பி.ஆர் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினாரை். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அவரது வேகம் மற்றும் புத்திசாலித்தனம், தான் கற்றுக் கொண்ட பயிற்சியை உரிய இடத்தில் பயன்படுத்திய சமயோஜிதபுத்தியை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
ஐ.பி.எஸ். அதிகாரி திபன்சு கப்ரா இதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து வைரலாகியது. ஒரு விவசாயிக்கு சி.பி.ஆர் செய்து இதயத்துடிப்பை மீட்டெடுத்து அவரது உயிரை காப்பாற்றினார் என பாராட்டி பதிவிட்டுள்ளார். மயக்கமடைந்த அவருக்கு அனைவரும் விசிரியால் காற்றுக்காக வீசுவதையும் அனைவரும் அவருக்கு உதவி செய்ததையும் தக்க நேரத்தில் செய்யும் வியத்தகு விஷயங்களை அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவையடுத்து நெட்டிசன்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டி வருகின்றனர். அவர் உடனடியாக செயல்பட்டு உயிரை மீட்டது நெகிழ்ச்சியான செயல் என தெரிவித்து வருகின்றனர்.