fbpx

திருநெல்வேலி | ‘திருமணம் ஆகாத 90’ஸ் கிட்ஸ்’ கடுப்பான இளைஞர்கள் அடித்த கலாய் போஸ்டர்..!

திருநெல்வேலியில் 90’ஸ் கிட்ஸ் இளைஞர்கள் திருமணமாகாததைக் குறிப்பிட்டு, ஒட்டிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாகவே 90’ஸ் கிட்ஸ் இளைஞர்களுக்கு பெண் கிடைப்பது என்பது பெரும் கஷ்டமாக உள்ளது. இது சம்பந்தமான பல மீம்ஸ்களும் இணையதளங்களில் வைரலாகிறது. இந்நிலையில் 90ஸ் கிட்ஸ் இளைஞர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், ஊரில் திருமண வரன்களை தடை செய்பவர்களே!! நீ எத்தனை வருசம் நல்லா வாழ்ந்துருவ? உன் பிள்ளைக்கு இந்த மாரி வந்தா? கல்யாணத்தை கெடுக்க நினைக்கிறியே? புறம்பேசி தடுக்க நினைக்கிறியே? ஒருத்தனுக்கு நல்லது நடக்கிறதை கெடுக்க நினைக்கிறய நல்லா இருப்பியா நீ? என எழுத்துப் பிழைகளான வார்த்தைகளுடன் அந்த போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பு என குறிப்பிட்டு, சில நபர்களின் அடையாளம் தெரியும். அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும் எனவும் திருமணத்தை நிறுத்த நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பொன்னாக்குடி கிராமத்தின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது பேசு பொருளாகியுள்ளது. பொன்னாக்குடி ஊரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ’90 கிட்ஸ்’ இளைஞர்கள் திருமணம் ஆகாமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more | இந்த மெசேஜ் வந்தால் உஷார்..!! தெரியாமல் கூட இந்த தவறை பண்ணிடாதீங்க..!!

English Summary

A poster of 90’s kids in Tirunelveli mentioning unmarried youth is going viral on the internet.

Next Post

உலகின் மிக விலையுயர்ந்த பள்ளிகள்!! ஆண்டு கட்டணம் ரூ. 1.34 கோடி! எங்க இருக்கு தெரியுமா?

Fri Jul 12 , 2024
A school in Switzerland called Collège Alpin Beau Soleil charging an annual fee of Rs 1.34 crore has come as a shock. Accordingly, here is a look at the tuition fees charged by some of the most expensive schools in the world.

You May Like