மலேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது..
மலேசியாவின் கோலாலம்பூர் அருகே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில் “ இன்று காலை 8.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் கோலாலம்பூரில் இருந்து 566 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது..” என்று தெரிவித்துள்ளது.. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை..
முன்னதாக, கடந்த வாரம் பெங்குலு, தெற்கு சுமத்ரா மற்றும் லாம்புங் மாகாணங்களுக்கு அருகில், சுமத்ரா தீவின் தென்மேற்கு கடற்கரையில் இரவு 9:30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் கரையிலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் கடலில் இருந்தது. எவ்வாறாயினும், உயிரிழப்பு அல்லது சேதங்கள் எதுவும் உடனடியாக அதிகாரிகளால் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..