ஒடிசா மாநிலம் தஸ்மந்திபூர் பகுதியில் அமைந்துள்ளது துங்கால் கிராமம். இந்த கிராமத்தில் சாலை வசதி கிடையாது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பெய்த கனமழையில் அந்த பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக இருந்தது. இந்த நிலையில், துங்கால் கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரும் வழியில் ரோட்டில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து ஆம்புலன்சில் ஏறுவதற்காக கர்ப்பிணியும் அவரது குடும்பத்தினரும் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது கர்ப்பிணிக்கு பிரசவ வலி அதிகமாகி, அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு பிறந்த குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளனர். பிறகு அதில் ஏறி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். தற்போது மருத்துவமனையில் தாய் மற்றும் சேய் இருவரும் நலமுடன். உள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது