டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மக்களவைத் தேர்தலுக்காக டெல்லியில் வாக்குப்பதிவு நடக்க இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அரவிந்த் சிங் லவ்லி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி உள்ளார். கூட்டணி கட்சியான ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அளித்த ராஜினாமா கடிதத்தில், அரவிந்தர் சிங் லவ்லி, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணியை ராஜினாமா செய்வதற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, புனையப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் கூட்டணிக்கு டெல்லி காங்கிரஸ் பிரிவு எதிராக இருந்தது. இருந்த போதிலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க கட்சி முடிவெடுத்தது என அரவிந்தர் சிங் லவ்லி தனது ராஜினாமா கடிதத்தில் எழுதியுள்ளார்.
லவ்லி 2017 இல் பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே மீண்டும் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்பொழுது அவர் மீண்டும் பாஜகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.