fbpx

“இந்தியாவுக்கே பெருமையான தருணம்” இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து…!

அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் இதழின் மத்திய வங்கியாளர் தரவரிசை (Central Banker Report Cards 2023) பட்டியலில் ‘A+’ பெற்றிருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ். மேலும் ‘A+’ என மதிப்பிடப்பட்ட மூன்று மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் அவர் முதலிடத்தில் இருந்தார்

குளோபல் ஃபைனான்ஸ் இதழின் வருடாந்திர சென்ட்ரல் பேங்கர் ரிப்போர்ட் கார்டுகள், புதுமையான, ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான உத்திகள் மூலம் சிறப்பாக செயல்படும் மத்திய வங்கி கவர்னர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பணவீக்கக் கட்டுப்பாட்டில் வெற்றி, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை போன்ற பல்வேறு காரணங்கள் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மதிப்பீட்டில் சுவிட்சர்லாந்தின் கவர்னர் தாமஸ் ஜே ஜோர்டான் மற்றும் வியட்நாமின் மத்திய வங்கித் தலைவர் நுயென் தி ஹாங் ஆகியோரும் ‘ஏ’ மதிப்பீட்டைப் பெற்றுள்ளனர்.

உலகளவில் மத்திய மத்திய வங்கியாளராக தரவரிசைப்படுத்தபப்ட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரதமர் மோடியின் வாழ்த்து பதிவில் “ஆர்பிஐ கவர்னர் ஸ்ரீ சக்திகாந்த தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உலக அரங்கில் நமது நிதித் தலைமையை பிரதிபலிக்கும் இந்தியாவிற்கு இது ஒரு பெருமையான தருணம். அவரது அர்ப்பணிப்பும் தொலைநோக்கு பார்வையும் நமது தேசத்தின் வளர்ச்சிப் பாதையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது” என்று பதிவிட்டிருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராகப் பதவியேற்றார் க்திகாந்த தாஸ். இதற்கு முன், நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறை மற்றும் பொருளாதார விவகாரத் துறையின் செயலர் உட்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

Kathir

Next Post

ஆகஸ்ட் 2023-ல் தமிழ்நாடு GST ரூ.9475 கோடி வசூல்...! மத்திய நிதித்துறை தகவல்...!

Sat Sep 2 , 2023
ஆகஸ்ட் 2023-ல் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 1,59,069 கோடியாக உள்ளது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி வருவாய் ரூ. 1,59,069 கோடியாக இருந்தது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 28,328 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி ரூ. 35,794 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 83,251 கோடியாகவும் இருந்தது. 2023 ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே […]

You May Like